2026 டி20 உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியை புறக்கணிப்பதாக பாகிஸ்தான் எடுத்துள்ள அதிரடி முடிவு கிரிக்கெட் உலகில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.
கொழும்பில் நடைபெறவிருந்த இந்த போட்டியைப் புறக்கணிப்பதன் மூலம் தனது அரசியல் நிலைப்பாட்டை உறுதிப்படுத்த பாகிஸ்தான் முயல்கிறது. ஆனால், "இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் மோத நேர்ந்தால் அப்போதும் பாகிஸ்தான் விலகுமா?" என கெவின் பீட்டர்சன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அஷ்வின் போன்ற மூத்த வீரர்கள், நாக்-அவுட் சுற்றுகளில் இத்தகைய முடிவு குழப்பத்தை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டியுள்ளனர். ஐசிசி இந்த விவகாரத்தில் கடும் அதிருப்தியில் உள்ளது. ஒரு குறிப்பிட்ட அணியை மட்டும் புறக்கணிப்பது தொடரின் வணிக மதிப்பு மற்றும் ஒளிபரப்பு வருவாயை பாதிக்கும் என எச்சரித்துள்ளது.
பிசிசிஐ வழக்கம் போல் தனது கடமைகளை செய்யும் நிலையில், பாகிஸ்தானின் பிடிவாதம் அந்த நாட்டு கிரிக்கெட் வாரியத்திற்கு நிதி ரீதியாகவும், நற்பெயர் ரீதியாகவும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.