தனது விளையாட்டு வாழ்க்கை முடிந்துவிட்டதாகவே நினைக்கிறேன் என இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெய்வால் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
2012ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிம் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற சாய்னா நெய்வால், ரியோ ஒலிம்பிக் போட்டியின் போது முழங்காலில் ஏற்பட்ட காயத்தால் பாதியிலேயே விலகினார்.
இதன் பின்னர் சாய்னா நேவால், அறுவைச் சிகிச்சை செய்து கொண்டு சீன சூப்பர் சீரிஸ் தொடரில் கலந்து கொள்ள மீண்டும் பயிற்சியைத் தொடங்கினார். ஆனால், அவரால் பழைய படி விளையாட முடியாமல் தொடர்ந்து வலியால் அவதிப்பட்டு வருகிறார்.
இது குறித்து சாய்னா கூறுகையில், ”எல்லாம் சரி. என் விளையாட்டு வாழ்க்கை முடிந்துவிட்டதாகவும், நான் திரும்ப வரமாட்டேன் என்றும் பலரும் நினைக்கிறார்கள். என் அடி மனதில், நானும் என் விளையாட்டு வாழ்க்கை முடிந்துவிட்டதாகவே நினைக்கிறேன்.
ஆகையால் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். சரியாக கணிக்க முடியாத விஷயம் இது” என தெரிவித்துள்ளார்.