2வது இன்னின்ங்சில் இந்தியா.. வெற்றிக்கு இன்னும் எத்தனை ரன்கள் தேவை?

Siva
திங்கள், 13 அக்டோபர் 2025 (17:09 IST)
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே டெல்லியில் நடைபெற்று வரும் இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் நான்காம் நாள் முடிவில் இந்தியா ஒரு விக்கெட் இழப்பிற்கு 63 ரன்கள் எடுத்துள்ளது.
 
ஏற்கனவே இந்தியா முதல் இன்னிங்சில் 518 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்த நிலையில், இரண்டாவது இன்னிங்சில் இந்தியா வெற்றி பெற 121 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த நிலையில், இன்னும் 58 ரன்கள் எடுத்தால் இந்தியா வெற்றி பெறும் என்ற நிலையில் நான்காம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
 
முன்னதாக, மேற்கிந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்சில் 248 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 390 ரன்களும் எடுத்துள்ளன. நாளைய ஐந்தாம் நாள் ஆட்டத்தில் சில மணி நேரத்தில் இந்தியா வெற்றி பெற்றுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
தற்போது களத்தில் கே.எல். ராகுல் மற்றும் சாய் சுதர்சன் உள்ளனர். ஜெய்ஸ்வால் 8 ரன்கள் எடுத்து அவுட் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உணர்ச்சிகளை வெளிப்படுத்தினால் கிரிக்கெட் வீரர்களுக்கு மரியாதை கிடைக்காது: அஸ்வின்

ஐபிஎல் மினி ஏலம்: 350 வீரர்களுடன் இறுதிப் பட்டியல் வெளியீடு!

சஞ்சு சாம்சனுக்கு பதில் ஷுப்மன் கில் துவக்க ஆட்டக்காரர்: மாற்றம் ஏன்? சூர்யகுமார் விளக்கம்

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இனி ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா? டிகே சிவகுமார் முக்கிய தகவல்..!

திருமணம் ரத்து.. ஸ்மிருதி மந்தனாவின் அதிகாரபூர்வ அறிவிப்பு.. இன்ஸ்டா பதிவில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments