Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: ஹர்திக் பாண்டியா நீக்கமா? அவருக்கு பதில் உள்ளே வருவது யார்?

Advertiesment
ஆசிய கோப்பை

Mahendran

, சனி, 27 செப்டம்பர் 2025 (11:02 IST)
ஆசிய கோப்பை  இறுதிப்போட்டிக்கு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் தகுதி பெற்றுவிட்ட நிலையில், இறுதிப்போட்டிக்கு முன்னதாக இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
பும்ரா மீண்டும் அணிக்கு திரும்புவார். அவருக்கு துணையாக ஹர்திக் பாண்டியா இரண்டாவது வேகப்பந்து வீச்சாளராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இலங்கைக்கு எதிரான போட்டியில் ஒரு ஓவர் மட்டுமே வீசிய ஹர்திக், காயம் காரணமாக வெளியேறினார். இறுதிப்போட்டியில் அவர் விளையாடுவாரா என்பதை பயிற்சியாளர் மோர்ன் மோர்க்கல் உறுதிப்படுத்தவில்லை. 
 
ஒருவேளை ஹர்திக் பாண்டியா விளையாடவில்லை என்றால், இலங்கைக்கு எதிராக சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய அர்ஷ்தீப் சிங்கிற்கு வாய்ப்பு கிடைக்கும். மேலும், இலங்கைக்கு எதிராக மோசமாக பந்துவீசிய ஹர்ஷித் ராணாவிற்கு பதிலாக ஷிவம் துபே அணிக்கு திரும்புவார்.
 
ஆசிய கோப்பை இறுதிப்போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச வீரர்கள் பட்டியல்:
 
ஷுப்மன் கில், அபிஷேக் சர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, அக்சர் படேல், குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா,  அர்ஷ்தீப் சிங்.

Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூர்யகுமார் யாதவ்வுக்கு 30 சதவீத போட்டிக் கட்டணம் அபராதம்.. ஐசிசி உத்தரவு!