Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பைக்கில் வந்தவர்களை பிடித்து இழுத்த போலீசார் ; வாலிபர்கள் படுகாயம் : சென்னையில் பரபரப்பு

பைக்கில் வந்தவர்களை பிடித்து இழுத்த போலீசார் ; வாலிபர்கள் படுகாயம் : சென்னையில் பரபரப்பு

Webdunia
திங்கள், 7 நவம்பர் 2016 (16:18 IST)
சென்னையில், இரு சக்கர வாகனத்தில் வேகமாக வந்த வாலிபர்களை திடீரெனெ தடுத்து நிறுத்தியதால் ஏற்பட்ட விபத்தில் இரு வாலிபர்கள் படுகாயம் அடைந்தனர். 


 

 
இன்று மாலை, களங்கரை விளக்கம் அருகே சில போலீசார் நின்றிருந்தனர். ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் செல்பவர்களை குறி வைத்து தடுத்து நிறுத்தி அபராதம் விதித்து வந்தனர்.
 
இந்நிலையில், அந்த வழியாக இரு வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்த ஒரு போலீசார் முயன்றார். அப்போது, வேகத்தை கட்டுப்படுத்த முடியாததால் அவர்கள் கீழே விழுந்தனர். இதில், அந்த போலீசாருக்கும் காலில் அடிபட்டது.
 
இதில் இரு வாலிபர்களும் பலத்த காயமடைந்தனர்.  இதனால் அங்கு கூடிய பொதுமக்களும், வாலிபர்களும் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த சில உயர் அதிகாரிகள் அவர்களை சமாதானப்படுத்தினர்.

படுகாயம அடைந்த வாலிபர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
இந்த சம்பவம் குறித்து சில வாலிபர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த விவகாரம் போலீசார் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஆடி காா்த்திகை விரதம்: முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு.. குவிந்த பக்தர்கள்..!

இன்றிரவு கொட்டப்போகுது கனமழை.. சென்னை உள்பட 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

சேலத்தில் தவெகவின் முதல் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்: தேதி அறிவிப்பு..!

தீர்ப்புகள் தயாரிக்க AI தொழில்நுட்பம் பயன்படுத்தலாமா? கேரள உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

துணை முதல்வர் நயினார் நாகேந்திரன்.. மேடையில் அறிவித்த பெண் பாஜக தொண்டரால் சலசலப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments