பைக்கில் வந்தவர்களை பிடித்து இழுத்த போலீசார் ; வாலிபர்கள் படுகாயம் : சென்னையில் பரபரப்பு
பைக்கில் வந்தவர்களை பிடித்து இழுத்த போலீசார் ; வாலிபர்கள் படுகாயம் : சென்னையில் பரபரப்பு
சென்னையில், இரு சக்கர வாகனத்தில் வேகமாக வந்த வாலிபர்களை திடீரெனெ தடுத்து நிறுத்தியதால் ஏற்பட்ட விபத்தில் இரு வாலிபர்கள் படுகாயம் அடைந்தனர்.
இன்று மாலை, களங்கரை விளக்கம் அருகே சில போலீசார் நின்றிருந்தனர். ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் செல்பவர்களை குறி வைத்து தடுத்து நிறுத்தி அபராதம் விதித்து வந்தனர்.
இந்நிலையில், அந்த வழியாக இரு வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்த ஒரு போலீசார் முயன்றார். அப்போது, வேகத்தை கட்டுப்படுத்த முடியாததால் அவர்கள் கீழே விழுந்தனர். இதில், அந்த போலீசாருக்கும் காலில் அடிபட்டது.
இதில் இரு வாலிபர்களும் பலத்த காயமடைந்தனர். இதனால் அங்கு கூடிய பொதுமக்களும், வாலிபர்களும் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த சில உயர் அதிகாரிகள் அவர்களை சமாதானப்படுத்தினர்.
படுகாயம அடைந்த வாலிபர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து சில வாலிபர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த விவகாரம் போலீசார் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.