Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெயின்டிலிருந்து ரசாயணம் தாக்கி இரு தொழிலாளர்கள் மயக்கம்.. போலீஸார் தீவிர விசாரணை

Advertiesment
tiruppur
palladam news
two workers
திருப்பூர் செய்திகள்
பல்லடம் செய்திகள்
தமிழக செய்திகள்

Bala

, செவ்வாய், 9 டிசம்பர் 2025 (15:14 IST)
palladam


திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகில் நிலத்தடி நீர் தொட்டியில் பெயிண்ட் அடித்த இரண்டு பேர் ரசாயனம் தாக்கி மயக்கம் அடைந்திருக்கின்றனர். இந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பெயின்டிலிருந்த ரசாயனம் தாக்கி அந்த இரு தொழிலாளர்கள் மயக்கம் அடைந்து இருக்கிறார்கள். 
 
அவர்களுடைய நிலை தற்போது கவலைக்கிடமாக உள்ளது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு கண்காணித்து வருவதாகவும் தற்போது தகவல் கிடைத்திருக்கிறது தொட்டியில் பெயிண்ட் அடித்துக் கொண்டிருக்கும் பொழுது பெயிண்டில் இருந்த ரசாயனம் தாக்கி அந்த இரு தொழிலாளர்கள் மயக்கம் அடைந்திருக்கின்றனர்.
 
அந்த இரு தொழிலாளர்களையும் அருகில் இருந்த ஆம்புலன்ஸ்சில் ஏற்றி மருத்துவமனையில் அனுப்பி வைத்திருக்கிறார்கள். அந்த இரு தொழிலாளர்களும் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். அதில் ஒரு தொழிலாளருக்கு வயது 50 லிருந்து 60 வரை இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
 
பல்லடம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் ராஜன் என்பவர் தனக்கு சொந்தமான நீர் தேக்க தொட்டியை சுத்தப்படுத்தும் பணியில் இரு தொழிலாளர்களை வரவழைத்து அந்த பணியை மேற்கொண்டு இருக்கிறார். ராஜேந்திரன் மற்றும் வெள்ளிங்கிரி ஆகிய இரு தொழிலாளர்கள் நீர் தேக்க தொட்டிக்கு பெயிண்ட் அடிக்கும் வகையில் பெயிண்ட் டப்பாவை திறந்திருக்கிறார்கள்.
 
அதிலிருந்து கெமிக்கல் வாயு தாக்கி இரண்டு பேருமே மயக்கம் அடைந்திருக்கின்றனர். மயக்கமடைந்தது மட்டுமல்லாமல் தண்ணீர் தொட்டிக்குள் இருவருமே விழுந்திருக்கின்றனர். விழுந்த இருவரையும் அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு துறையினர் உதவியுடன் மீட்டு அவர்கள் இருவரையும் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர்.
 
அங்கு இருந்து  மேல் சிகிச்சைக்காக அவர்கள் இருவரும் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்கள். இது தொடர்பாக காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பல்லடம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தேசிய கபடி வீராங்கனை தற்கொலை.. தலைமறைவான கணவரை தேடும் போலீசார்..!