நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய வேண்டும்": திருமாவளவன் வலியுறுத்தல்

Mahendran
வியாழன், 4 டிசம்பர் 2025 (14:38 IST)
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். 
 
நீதிபதி சுவாமிநாதனின் உத்தரவு அப்பட்டமான அதிகார மீறல் என்றும், அரசமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்றும் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார். அமைதி நிலவிய நிலையில், வன்முறையை தூண்டும் நோக்கில் வேறு இடத்தில் தீபம் ஏற்ற சொல்லி உத்தரவிட்டதுடன், உயர் நீதிமன்ற பாதுகாப்பு பணியில் இருந்த சிஐஎஸ்எஃப் வீரர்களை போராட்டக்காரர்களுக்குத் துணையாக அனுப்பியது சட்டம் - ஒழுங்கைச் சீர்குலைத்தது என்று அவர் சாடியுள்ளார்.
 
மேலும், தொடர்ந்து பொது அமைதியை சீர்குலைக்கும் விதமாக செயல்படும் நீதிபதி மீது இம்பீச்மெண்ட்  நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார். கலவரம் ஏற்படாமல் தடுத்த தமிழ்நாடு அரசுக்கும், மத நல்லிணக்கத்தை காத்த திருப்பரங்குன்றம் பொதுமக்களுக்கும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரம்: தீப தூண் கோயிலை விட பழமையானதா? நீதிபதிகள் கேள்வி..!

அன்புமணி தான் பாமக தலைவர்.. மாம்பழம் சின்னம் முடக்கப்படலாம்: தேர்தல் ஆணையம்..!

புதுச்சேரியில் விஜய் ரோட் ஷோ!.. சொந்த ஊரில் காரியம் சாதிக்க முடியாத புஸ்ஸி ஆனந்த்..

தனி நீதிபதி தீர்ப்பு சட்டம்-ஒழுங்கைப் பாதித்தது: திருப்பரங்குன்றம் வழக்கில் தமிழக அரசு வாதம்

புதைக்கப்பட்ட இரண்டே நாட்களில் சிறுமியின் உடல் மாயம்.. தஞ்சை அருகே பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments