தமிழ்நாட்டில் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை: குடிமகன்கள் கலக்கம்..!

Siva
வெள்ளி, 5 ஏப்ரல் 2024 (14:16 IST)
தேர்தல் வாக்குப் பதிவை முன்னிட்டு தமிழ்நாட்டில் மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து குடிமகன்கள் கவலையடைந்துள்ளனர்.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தற்போது அமலில் உள்ளது என்பதும் இதனால் கெடுபிடி அதிகமாக உள்ளது என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் ஏப்ரல் 17ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை மூன்று நாட்கள் மூட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
 
மூன்று நாட்கள் தொடர்ச்சியாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை  அடுத்து குடிமகன்கள் கவலையடைந்துள்ளனர். இருப்பினும் முன்கூட்டியே குடிமகன்கள் தேவையான மது வகைகளை வாங்கி வைத்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க இலவசம்!.. தமிழக அரசு அறிவிப்பு!...

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க மாட்டோம்.. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: விசிக

எக்ஸ் வலைத்தளம் திடீரென முடங்கியதா? விளக்கம் அளிக்காத எலான் மஸ்க்..!

செங்கோட்டை குண்டுவெடிப்பு சதியில் ‘பிரியாணி’ தான் கோட்வேர்டா? அதிர்ச்சி தகவல்கள்!

ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டன வங்கதேச சர்வதேசத்தின் உள்விவகாரம்: சீனா

அடுத்த கட்டுரையில்
Show comments