நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! எந்தெந்த மாவட்டங்களில்?

Mahendran
திங்கள், 1 டிசம்பர் 2025 (17:49 IST)
சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் தொடரும் கனமழை மற்றும் அதிகனமழை எச்சரிக்கையின் காரணமாக, நாளை  பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 
சென்னை வானிலை ஆய்வு மையம், இந்த இரு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்திருந்தது. 'டிட்வா' புயல் சின்னம் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்த நிலையில், இன்று காலை முதல் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
 
புயல் சின்னம் அடுத்த இரண்டு நாட்களுக்கு சென்னை கடற்கரை அருகே நிலை கொண்டிருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதால், மழை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடிகை கனகாவின் தந்தை இயக்குனர் தேவதாஸ் காலமானார்

18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யும்போது தொகுதி மக்களை கேட்டுத்தான் நீக்கினாரா? ஈபிஎஸ்க்கு டிடிவி கேள்வி

எடப்பாடி ஒரு பெரிய தலைவர் இல்லை.. அவருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை: செங்கோட்டையன்

தொடர் கனமழை எதிரொலி.. மரம் விழுந்து பள்ளி சுவர் சேதம்.. OMR சாலையில் போக்குவரத்து நெரிசல்..

திமுக எங்களுக்கு எதிரி இல்லை!.. திடீர் டிவிஸ்ட் கொடுத்த ஆதவ் அர்ஜுனா!..

அடுத்த கட்டுரையில்
Show comments