Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிக்காத ராம்குமாரின் கைரேகை : சிக்கலில் போலீசார்

Webdunia
திங்கள், 18 ஜூலை 2016 (13:37 IST)
சுவாதி படுகொலையில், அவரை வெட்ட பயன்படுத்திய ஆயுதத்தில் ராம்குமாரின் கைரேகை சிக்கவில்லை என்பதில், போலீசாருக்கு சிக்கலை ஏற்பட்டுள்ளது.

 
 

 

 
சென்னையை சேர்ந்த இளம் பெண் சுவாதி படுகொலையை செங்கோட்டையை சேர்ந்த ராம்குமார் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டு, அவரிடம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
 
நீதிமன்ற காவலில் இருந்த ராம்குமாரை, போலீசார் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை செய்தனர். அதில் அவர், குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. அதேபோல், கொலை நடந்த நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் அவரை போலீசார் அழைத்து சென்று, அவர் எப்படி கொலை செய்தார் என்ற வாக்குமூலத்தையும் பெற்றுள்ளனர். 
 
எனவே, ராம்குமாருக்கு எதிராக ஆதாரங்களை திரட்டி வரும் போலீசாரல், கொலை செய்யப் பயன்படுத்திய ஆயுதத்தில் அவரின் கைரேகையை பெறமுடியவில்லை என்ற செய்தி வெளியாகியிருக்கிறது. 
 
அதாவது, சுவாதியை கொலை செய்ய பயன்படுத்திய அரிவாளை ராம்குமார் தண்டவாளத்தில் வீசி விட்டு சென்றுள்ளார். மேலும், அவரின் கைரேகையும் அழிக்கப்பட்டிருந்தது ஆய்வில் தெரிய வந்துள்ளது. வழக்கில் முக்கிய சாட்சியாக கருதப்படும் அரிவாளில் ராம்குமாரின் கைரேகை இல்லாதது போலீசாருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments