பொய் சொல்லி மாம்பழம் சின்னத்தை பெற்றுவிட்டார் அன்புமணி: ராமதாஸ் குற்றச்சாட்டு

Siva
புதன், 24 செப்டம்பர் 2025 (17:56 IST)
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி ராமதாஸ் பீகார் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக கூறி மாம்பழம் சின்னம் பெற்றுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.
 
ராமதாஸ் அளித்த பேட்டியில், “பொய் பேசுவதில் வல்லவரான அன்புமணியின் வேஷம் கலைந்துவிட்டது. பொய்யான தகவல்களை கூறி ஏமாற்றியவர்கள் நிச்சயம் வருத்தப்படுவார்கள். அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நான் 46 வருடங்களாக ஓய்வின்றி உழைத்து வருகிறேன். ஆனால், இப்போது பா.ம.க. என்று சொல்லிக்கொண்டு ஒரு கும்பல் செயல்பட்டு வருகிறது. அந்த கும்பலின் உண்மையான முகம் விரைவில் வெளிப்படும்.
 
தேர்தல் ஆணையத்திடம் அன்புமணி தரப்பினரால் போலி ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டு, மாம்பழம் சின்னம் பெறப்பட்டுள்ளது. அவர்கள் போலி ஆசாமிகள்” என்று கூறினார்.
 
பீகாரில் பா.ம.க. போட்டியிடப் போவதாகவும், அங்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது, அது உண்மையா?” என்று நிருபர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, ராமதாஸ், “தென் கொரியா, ஜப்பான், மொரீஷியஸ் ஆகிய நாடுகளிலும் கூட அவர்கள் மாம்பழம் சின்னத்தில் போட்டியிட போகிறார்கள்” என்று நக்கலாக பதிலளித்தார்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முயல்வேட்டையில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் பரிதாப பலி.. திருவண்ணாமலையில் சோகம்..!

சபரிமலைக்கு மாலை போட்ட மாணவர் கருப்பு உடை அணிய தடை.. பள்ளி நிர்வாகத்திற்கு எதிர்ப்பு..!

வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்தால் நேபாளம் போல் புரட்சி வெடிக்கும்: ஆர்ஜேடி எச்சரிக்கை

மேகதாது அணை சர்ச்சை: உச்ச நீதிமன்ற அனுமதி குறித்த தகவல் தவறு! அமைச்சர் துரைமுருகன் விளக்கம்

மேகதாதுவில் அணை கட்ட சுப்ரீம் கோர்ட் அனுமதியா? தமிழக அரசுக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments