“பேட்மேன்” என அனைவரும் அன்புடன் அழைக்கும் பத்மஸ்ரீ அருணாசலம் முருகநந்தம் அவருக்கு கீதம் பல்கலைக்கழகம் சார்பில் இலக்கிய கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.
மாநிலங்களின் புறநகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் மாதவிடாய் சுகாதாரத்தை மாற்றியமைத்த முருகநந்தம், உலகளவில் பெண்களின் நலனுக்காக போராடும் இயக்கங்களுக்கு துணை நின்றுள்ளார்.
உலகிலேயே மிகவும் தாக்கம் செலுத்தும் 100 பேரில் ஒருவராக, தனியார் பத்திரிக்கை அவரை தேர்ந்தெடுத்தது குறிப்பிடத்தக்கது.
இதனை கருத்தில் கொண்டு இந்திய அரசால் அவருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது.
அவருடைய வாழ்க்கை கதையை அடிப்படையாக கொண்டு, தேசிய விருது பெற்ற ஹிந்தி திரைப்படமான “Padman” உருவானது.
அந்த கதாபாத்திரத்தில் நடிகர் அக்ஷய் குமார் நடித்தார்.
இந்த திரைப்படம் இந்தியா முழுவதும் மாதவிடாய் விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
மேலும், ஆஸ்கார் விருது வென்ற “Period. End of Sentence.” ஆவணப்படம் அவரது கண்டுபிடிப்பு மற்றும் அதன் தாக்கத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தியது.
இவரது பயணம் இன்னும் பல உன்னத இலக்குகளை நோக்கி நகர்கிறது.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பெண்களை வலுப்படுத்தும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ள முருகநந்தம், தற்போது ஹாலிவுட் திரைப்படமாக அவருடைய வாழ்க்கையை உருவாக்கும் திட்டங்கள் முன்னேறி வருகின்றன.
இந்தத் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.