Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜய் பக்கம் வந்த முதல் கட்சி!.. தவெகவுடன் கூட்டணி அமைக்கும் என்.ஆர்.காங்கிரஸ்!..

Advertiesment
vijay
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை துவங்கிய போது ‘எங்களுடன் கூட்டணி வைக்கும் கட்சிகளுக்கு ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு கொடுப்போம்’ என அறிவித்தார்.
தமிழகத்தை அதிமுக, திமுக கட்சிகள் 50 வருடங்களுக்கு மேல் மாறி மாறி ஆட்சி செய்து வரும் நிலையில் ஒரு முறை கூட அந்த இரு கட்சிகளும் இப்படி ஒரு வாக்குறுதியை கொடுக்கவில்லை..

இப்படி வாக்குறுதி கொடுத்தால் தங்கள் பக்கம் தமிழகத்தில் உள்ள பல கட்சிகள் கூட்டணிக்கு வருவார்கள் என விஜய் கணக்கு போட்டார். ஆனால் தமிழகத்தில் உள்ள எல்லா கட்சிகளுமே திமுக அல்லது அதிமுக என தங்களின் கூட்டணிகளை அமைத்து விட்டன. காங்கிரஸ் மட்டும் இன்னும் திமுகவுடன் பேரம் பேசி வருகிறது. எப்படி இருந்தாலும் காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணி அமைக்கும் இடம் தெரிகிறது.. மீதமிருப்பது தேமுதிகவும், ராமதாஸ் பாமக மட்டுமே. அவர்கள் விஜய் பக்கம் வர வாய்ப்பில்லை என்கிறார்கள்.

எனவே, விஜய் கிட்டத்தட்ட தனியாக தேர்தலை சந்திக்கும் நிலைமைக்கு வந்து விட்டார். இந்நிலையில்தான் புதுச்சேரியில் ஆட்சியில் உள்ள என்.ஆர்.காங்கிரஸ் தமிழகத்தில் தாவெகவுடன் கூட்டணி அமைக்க திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது..

webdunia


இதில் ஆச்சர்யம் என்னவெனில், என்.ஆர்.காங்கிரஸ் புதுச்சேரியில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியில் இருக்கிறது. ஆனால், தமிழகத்தில் தவெகவுடன் கூட்டணி அமைக்க விரும்புகிறது.  தொகுதி பங்கீடு பற்றி பேச தன்னை சந்திக்க வந்த புதுவை பாஜக மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானாவிடம் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இந்த தகவலை சொல்லி அவரை அதிர்ச்சியை கொடுத்ததாக செய்திகள் வெளியாகியிருக்கிறது..

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2026 சட்டமன்ற தேர்தலுக்கு வேட்பு மனு!.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட திமுக..