வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இலங்கையின் கிழக்கு கடற்கரை வழியாக நகர்ந்து யாழ்ப்பாணத்தை அடையும் போது வலுவிழக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் முதல் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் மிகச்சிறப்பான மழைப்பொழிவு இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் பயிர்ப் பாதுகாப்பில் கூடுதல் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
திங்கட்கிழமை முதல் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவிழந்து ஈரப்பதம் உள்ளே தள்ளப்படுவதால், தமிழகத்தின் உட்புற மற்றும் தெற்கு மாவட்டங்களிலும் மழை நீடிக்கும். இந்த இதமான மழையை மக்கள் பாதுகாப்பாக அனுபவிக்கலாம்.