அனைத்து ரேஷன் கடைகளிலும் கருவிழி பதிவு திட்டம்: அமைச்சர் சக்கரபாணி தகவல்!

Webdunia
திங்கள், 6 நவம்பர் 2023 (14:41 IST)
அனைத்து ரேஷன் கடைகளிலும் கருவிழி பதிவு திட்டம் செயல்படுத்தப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் தெரிவித்துள்ளார்.

தற்போது ரேஷன் கடைகளில் அனைத்து பயனாளிகளின் கைரேகை பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதும் கைரேகை ஒத்துப்போனால் மட்டுமே பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் விரைவில் கருவிழி பதிவு திட்டத்தை அனைத்து ரேஷன் கடைகளிலும் செயல்படுத்த உள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்

வரும் மார்ச் மாதத்திற்குள் 30 சதவீதம் ரேஷன் கடைகளில் கருவிழி பதிவு திட்டம் நடைமுறைக்கு வரும் என்றும்  அடுத்த ஒன்பது மாதத்திற்குள் கருவிழி பதிவு திட்டத்தை அனைத்து கடைகளிலும் செயல்பாடுகள் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் தமிழகத்தில் வரும் பொங்கல் தினத்திற்குள் புதிய ரேஷன் கார்டுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10 நாட்கள் தங்கம் விலையில் மாற்றமே இல்லை.. எதிர்காலத்தில் ஏறுமா? இறங்குமா?

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதால் பரபரப்பு..!

நீதிபதி சுவாமிநாதன் பணியில் இருந்து நீக்க நோட்டீஸ்? இந்தியா கூட்டணி திட்டம்?

ஓபிஎஸ்ஐ அடுத்து திடீரென டிடிவி தினகரனை சந்தித்த அண்ணாமலை.. என்ன திட்டம்?

இன்று புதுச்சேரியில் விஜய்யின் பொதுக்கூட்டம்.. க்யூ ஆர் கோடு அடையாள அட்டை இருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments