தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் வேறு வேறு அல்ல, இரண்டும் ஒன்றுதான்.. தவெகவில் இணைந்த செங்கோட்டையன் பேட்டி..!

Mahendran
வியாழன், 27 நவம்பர் 2025 (13:25 IST)
அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சரான கே.ஏ. செங்கோட்டையன், இன்று த.வெ.க.வில் இணைந்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். "2026-ல் தமிழ்நாட்டில் மக்களால் மாபெரும் புரட்சி உருவாகும்" என்றும், அதற்காகவே விஜய்யுடன் இணைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
 
அ.தி.மு.க. பிளவுபட்ட நிலையில் அனைவரும் இணைய வேண்டும் என தான் வலியுறுத்தியதாகவும், அதற்காக தேவர் ஜெயந்திக்கு சென்றதற்கான பரிசாகவே அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டேன் என்றும் அவர் வருத்தம் தெரிவித்தார். 50 ஆண்டுகால உழைப்பிற்கு இதுவே அ.தி.மு.க. தனக்களித்த பரிசு என்றார்.
 
"தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் வேறு வேறு அல்ல, இரண்டும் ஒன்றுதான். மூன்றாவதாக ஒரு கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள். டெல்லி, பஞ்சாப் போல தமிழகத்திலும் மாற்றம் வேண்டும்" என்று அவர் கூறினார்.
 
 புதிய புனித ஆட்சி அமைய இளவல் விஜய் வெற்றி பெறுவார் என நம்பிக்கை தெரிவித்த செங்கோட்டையன், வேறு எந்தக் கட்சியிலிருந்தும் தனக்கு அழைப்பு வரவில்லை என்றும் தெளிவுபடுத்தினார்.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments