வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு.. கனமழை பெய்யும் என வானிலை எச்சரிக்கை..!

Mahendran
செவ்வாய், 30 செப்டம்பர் 2025 (10:06 IST)
வங்கக் கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளதை அடுத்து, தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
தென்னிந்திய பகுதிகள் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும், அதேபோல் வடக்கு அந்தமான் கடல் பகுதியில் இன்னொரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும், இதன் காரணமாக மத்திய வங்க கடல் பகுதியில் ஓர் காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
எனவே, விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், தமிழகத்தின் பல இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments