இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Mahendran
புதன், 14 மே 2025 (14:22 IST)
சென்னை வானிலை மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், அந்தமான் கடல் பகுதியில் உருவாகி உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, தமிழகத்தில் இன்று முதல் அடுத்த மூன்று நாட்கள் வரை பல இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இன்று கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
நாளை  தேதி) கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர் மற்றும் வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
 
மே 15ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், பெரம்பலூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் மழை உண்டாகும் எனக் கூறப்பட்டுள்ளது.
 
மழையுடன் வீசும் காற்றின் வேகம் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வரை இருக்கக்கூடும்.
 
சென்னை நகரில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் லேசான மழை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அதேசமயம், அதிகாலை முதல் மதியம் வரை வெப்பம் அதிகரித்து, 38°C வரை செல்லலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

100% சொத்து வரி உயர்வு.. ஆர்ப்பாட்டம் தேதியை அறிவித்த அதிமுக..!

அடுத்த கட்டுரையில்
Show comments