Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒரே இரவில் 39 உடலுக்கு உடற்கூராய்வு செய்யப்பட்டது எப்படி? அவசரம் காட்டியது ஏன்? சட்டசபையில் ஈபிஎஸ் கேள்வி..!

Advertiesment
Edappadi vs Stalin

Siva

, புதன், 15 அக்டோபர் 2025 (13:20 IST)
கரூர் துயரச் சம்பவம் குறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அளித்த விளக்கம் தொடர்பாக, அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடுமையான கேள்விகளையும் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தார்.
 
அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால், கரூர் துயர சம்பவத்தைத் தடுத்திருக்க முடியும்.
 
நெரிசலை காரணம் காட்டி அதே வேலுச்சாமிபுரத்தில் அதிமுக கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தமிழக வெற்றி கழகத்திற்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது ஏன்? 
 
விபத்தில் இறந்த 39 பேரின் உடல்களுக்கும் ஒரே இரவில் உடற்கூராய்வு செய்யப்பட்டது ஏன்? எதற்காக இந்த அவசரம் காட்டப்பட்டது? 
 
சட்டப்பேரவை மரபுப்படி, எதிர்க்கட்சியினர் பேசிய பின்னரே முதலமைச்சர் பேச வேண்டும். ஆனால், சட்டமன்றத்தில் எல்லாம் தலைகீழாக நடக்கிறது
 
கரூர் சம்பவம் தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் கூறிய தகவலுக்கும், சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி கூறிய தகவலுக்கும் இடையில் முரண்பாடுகள் இருக்கிறது. இவ்வாறு ஈபிஎஸ் பேசினார். 
 
Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கரூர் கூட்ட நெரிசலுக்கு 7 மணி நேரம் விஜய் தாமதமாக வந்ததே காரணம்: பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின்