திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடர்பாக மதுரை மாவட்டத்தில் நிலவும் சர்ச்சைகளுக்கு மத்தியில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், வளர்ச்சி அரசியலுக்கும், பிளவுபடுத்தும் அரசியலுக்கும் இடையேயான வேறுபாட்டை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்று வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில், "மாமதுரைக்குத் தேவை வளர்ச்சி அரசியலா அல்லது …………….. அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள்" என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். மதுரை மக்கள், மெட்ரோ ரயில், எய்ம்ஸ், புதிய தொழிற்சாலைகள் மற்றும் வேலைவாய்ப்புகளையே தங்கள் வளர்ச்சிக்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் அழுத்தமாக கூறியுள்ளார்.
உயர் நீதிமன்ற மதுரை அமர்வு, மலை உச்சியில் தீபம் ஏற்ற உத்தரவிட்ட நிலையில், தர்கா அருகருகே உள்ளதால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி காவல்துறை அனுமதி மறுக்கிறது. மதுரை மாவட்ட ஆட்சியரின் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்ட பின்னரும், நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த முடியாத நிலை நீடிக்கிறது.
இந்த சர்ச்சைகள் வகுப்புவாத பதற்றத்தை தூண்டுவதாக திமுக குற்றம் சாட்டியுள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் வளர்ச்சி திட்டங்களை முன்னிலைப்படுத்த வேண்டும் என்று மறைமுகமாக கேட்டுக்கொண்டுள்ளார்.