உத்தர பிரதேசத்தில் சாதியம் சார்ந்த நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் வகையில் புதிய விதிமுறைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தில் சாதிய அடக்குமுறைகள் தொடர்ந்து வரும் நிலையில் சாதிய வெறியை ஊக்குவிக்கும் எந்த நடவடிக்கைக்கும் அனுமதிக்கக் கூடாது என அலகாபாத் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது. அதன்படி தற்போது புதிய விதிமுறைகளை உத்தர பிரதேச அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி உத்தர பிரதேசத்தில் சாதி சார்ந்த ஊர்வலங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. சாதிப் பெயர், சாதி சார்ந்த கோஷங்களை வாகனங்களில் ஸ்டிக்கராக ஒட்டினால் அபராதம் விதிக்கப்படும். அதுபோல கிராமங்களில் சாதிய அடையாளத்தை பெருமைப்படுத்தும் படியாக பொதுவெளியில் வைக்கப்பட்டுள்ள பலகைகளையும் அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K