Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அமெரிக்க கூல்ட்ரிங்க்ஸ், உணவுகளுக்கு தடை! தமிழக ஓட்டல் உரிமையாளர்கள் அதிரடி முடிவு!

Advertiesment
Pepsi Coke ban

Prasanth K

, புதன், 3 செப்டம்பர் 2025 (15:54 IST)

இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரிக்கு பதிலடியாக அமெரிக்க பொருட்களை புறக்கணிக்க தமிழக ஓட்டல் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

 

இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு ஜவுளி துணிகள், தோல், நவரத்தினங்கள், இறால், ஆபரணங்கள், ரசாயனங்கள் என பல பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வரும் நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா மீது விதித்துள்ள 50 சதவீதம் வரி காரணமாக மேற்கண்ட தொழில்சார் நிறுவனங்களும், அதில் பணிபுரியும் மக்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

 

இந்நிலையில் தமிழக மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திய அமெரிக்காவின் பொருட்களை புறக்கணிப்பதாக தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர் சங்க தலைவர் வெங்கடசுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் “அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீதம் வரியால் மக்கள் பாதித்துள்ளனர். எனவே தமிழக ஓட்டல்களில் அமெரிக்க பொருட்களை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். அமெரிக்க தயாரிப்புகளான கோக், பெப்சி, கேஎப்சி, அமெரிக்க நிறுவனங்களின் மினரல் வாட்டர் பாட்டில்கள் அனைத்தையும் புறக்கணித்துவிட்டு, அவற்றிற்கு பதிலாக இந்திய பொருட்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

 

மேலும் உணவு டெலிவரி நிறுவனங்களான ஸ்விகி, ஸொமேட்டோ போன்றவற்றை புறக்கணிக்கவும், தமிழகத்திலிருந்து சாரோ என்ற செயலியை விரைவில் அறிமுகம் செய்யவும் உள்ளோம். சாரோ உணவு டெலிவரி சேவை செயலியில் ஸ்விகி, ஸொமேட்டோவில் டெலிவரி பாயாக பணிபுரிந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும்” என கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

8 மாவட்டங்களில் காத்திருக்குது மழை! எந்தெந்த மாவட்டங்களில்?