100% அதிக வரி விதித்த தாம்பரம் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளபடி, வரும் டிசம்பர் 16-ஆம் தேதி மாலை 4 மணியளவில் மேற்கு தாம்பரம், சண்முகம் சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
தாம்பரம் மாநகராட்சி நிர்வாகம், வீடுகளுக்கான சொத்து வரியை 100% வரையும், வணிக நிறுவனங்களுக்கான வரியை 150% வரையும் தன்னிச்சையாக உயர்த்தியதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
மேலும், மருத்துவமனைகளில் போதிய வசதிகள் இன்மை, சுகாதாரச் சீர்கேடுகள், ஏரிகள் மாசுபடுதல், மற்றும் 600 ஏக்கர் விவசாய நிலங்களை Land Pooling திட்டத்தின் கீழ் கையகப்படுத்த மேற்கொள்ளப்படும் முயற்சி உள்ளிட்ட நிர்வாக சீர்கேடுகளுக்கு எதிராக தி.மு.க. அரசைக் கண்டித்து அ.தி.மு.க.வினர் போராட உள்ளனர்.
மேலும் தாம்பரம் சானடோரியத்தில் அவசரமாக திறக்கப்பட்ட புதிய மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறை உள்ளது. மேலும், அங்கு குடிநீர் வசதி இல்லாததாலும், சுகாதாரமற்ற நிலை நிலவுவதாலும் நோயாளிகள் அவதிப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.