Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தண்ணீர் பிடிக்கச் சென்ற சிறுமி! வாயை பொத்தி வன்கொடுமை! - நீலகிரியில் அதிர்ச்சி சம்பவம்!

Prasanth K
செவ்வாய், 22 ஜூலை 2025 (09:26 IST)

நீலகிரியில் 8ம் வகுப்பு படிக்கும் சிறுமியை இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்கள் ஊட்டியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வரும் நிலையில், பெற்றோர் இருவருமே வேலைக்கு சென்று வந்துள்ளனர். அவர்களது மூத்த மகள் 8ம் வகுப்பு படித்து வருகிறார். சமீபமாக சிறுமியின் வீட்டிற்கு பக்கத்தில் வசிக்கும் விஜய் என்ற இளைஞர் சிறுமியை காதலிப்பதாக கூறி பின்னால் சுற்றி வந்துள்ளார்.

 

ஆனால் அதற்கு சிறுமி மறுத்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது தனது வீட்டுக் குழாயில் தண்ணீர் வருவதாகவும், வேண்டுமென்றால் வந்து பிடித்துக் கொள் என்றும் அந்த இளைஞர் கூறியுள்ளார். அதை நம்பி தண்ணீர் பிடிக்க சென்ற சிறுமியை வாயை பொத்தி, ஆள் இல்லா கட்டிடம் ஒன்றிற்குள் தூக்கிச் சென்ற அந்த இளைஞர் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். வெளியில் சொன்னால் கொன்று விடுவேன் என்று மிரட்டியும் உள்ளார். 

 

இதனால் மாணவி அதுகுறித்து யாரிடமும் பேசாத நிலையில் மிகவும் மனச்சோர்வோடு காணப்பட்டுள்ளார். சிறுமியின் பெற்றோர் அதை கண்காணித்து விசாரித்தபோது உண்மை தெரிய வந்துள்ளது. அதை தொடர்ந்து அவர்கள் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இளைஞர் விஜய் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தண்ணீர் பிடிக்கச் சென்ற சிறுமி! வாயை பொத்தி வன்கொடுமை! - நீலகிரியில் அதிர்ச்சி சம்பவம்!

தேனாம்பேட்டை அப்பல்லோவுக்கு மாற்றப்படும் முதல்வர் மு.க.ஸ்டாலின்! எப்படி இருக்கிறார்?

அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளிலும் சிசிடிவி கட்டாயம்: மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

சைடிஷ் சரியாக வழங்கவில்லை என தகராறு.. பார் ஊழியர் குத்தி கொலை..!

ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஏமாளிகள் அல்ல என சொன்னது ஏன்? ஈபிஎஸ் விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்