Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாயமாய் நீளும் பாதை

-விக்ரமாதித்யன்

Webdunia
திங்கள், 28 ஏப்ரல் 2008 (12:34 IST)
ந‌‌வீ ன ‌ விரு‌ட்ச‌ம ் எ‌ன் ற ‌ சி‌ற்‌றித‌ழி‌ல ் வெ‌ளியா ன ‌ வி‌க்ரமா‌தி‌த்ய‌னி‌ன ் க‌விதை‌ய ை த‌மி‌ழ ். வெ‌ப்து‌னிய ா. கா‌ம ் வாசக‌ர்களு‌க்கா க இ‌ங்க ு வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ளோ‌ம ்.

கனவுப் பாதையென்றுதான்
நினைத்துக் கொண்டிருந்தான்

அழிவுப்பாதையென்று
அப்புறமாய்த்தான் கண்டு கொண்டான்

கவிதைப் பாதையென்பதும்
அழிவுப்பாதையாய் இருக்கக் கண்டான்

எல்லாப்பதையும்
அழிவுப்பாதையாய் இருக்கக் கண்டான்

எந்தப் பாதையாய்
இருந்தால் என்ன

ஏதோ ஓர்
அழிவுப் பாதை

நீண்ட
நெடும்பாதை

நடக்க நடக்க மாயமாய்
நீளும் பாதை

எப்பொழுது
வந்து சேரும் அத்தம்

இப்பொழுது
இருப்பது எந்த இடம்.

( நன்றி: நவீன விருட்சம், அக்- டிச. 2000)
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனதை உருக்கும் ஒரு சந்திப்பு சென்னையில் : இரத்த ஸ்டெம் செல் கொடையாளர் அதனால் பலனடைந்த 11 வயது சிறுவனுடன் சந்திப்பு!

சின்ன வெங்காயம் உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் பலன்கள்..!

தினம் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் பலன்கள்..!

பீட்ரூட்டை உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்..!

அவித்த முட்டையில் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்..!

Show comments