புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள்!
, செவ்வாய், 29 ஏப்ரல் 2008 (14:20 IST)
புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் 117வது பிறந்தநாளான இன்று அவருடைய கவிதைகள் சிலவற்றை வாசகர்களின் கருத்திற்கு விருந்தாக்குகிறோம். தமிழ் அமுது!தமிழுக்கும் அமுதென்று பேர்! - அந்தத்தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்!தமிழுக்கு நிலவென்று பேர்! - இன்பத்தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்!தமிழுக்கு மணமென்று பேர்! - இன்பத்தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!தமிழுக்கு மதுவென்று பேர்! - இன்பத்தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! - இன்பத்தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! - இன்பத்தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! - இன்பத்தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! - இன்பத்தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!உலக ஒற்றுமை!கூடித் தொழில் செய்க!தொழிலாளர் விண்ணப்பம்!மானிட சக்தி!முன்னேறு!