Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கசிவுகள்

Webdunia
வியாழன், 3 டிசம்பர் 2009 (12:29 IST)
பெருவெ‌ளி‌ப் பெ‌ண் எ‌ன்ற க‌விதை பு‌த்தக‌த்‌தி‌ல் இரு‌ந்து க‌சிவுக‌ள் எ‌ன்ற தலை‌ப்‌பிலான க‌விதை இ‌ங்கே.

அனுபவிப்புக்களின் கசிவுகளைக் கூறினேன்
கலங்கினர் சிலர்
இவர்களின் இரக்கம் வேண்டாமென
அடக்கி வாசித்தேன்
புனைவுகளின் வெளிப்பாடு என்றனர்
உள்ளக் குமுறலை
உள்ளவாறே வெளியிட்டேன்
முழக்கங்கள் என்றனர்
தொடர்ந்து ஒலிக்கும் இவர்கள் குரல் கடந்து
என் பயணம்
நிறுத்தமற்றதாய்…இயல்பாய்…

ந‌ன்‌றி - பெருவெ‌ளி‌ப்பெ‌ண்
ச. ‌விசயல‌ட்சு‌மி

வீசும் தருணம்

உறங்கப் போகையில் சொன்ன
குட்டிக் கதைகளோடு
உணர்வுகளை
உற்சாகப்படுத்தவும்
கட்டுப்படுத்தவும்
என் அம்மாவை நினைக்கிறேன்
என் மகனை
அழ அழ அள்ளி
காப்பகத்தில்
வீசும் தருணங்களில்

பயண ஊர்தியில்
பட்டுத் தெறிக்கும் உடல்கள்
திடுக்கிட்ட அடுத்தநொடி

உடனிருக்கும்
உறவுகளைப் பார்த்ததும்

அப்பாடா தப்பித்தோமெனப்
பூக்கும் புன்னகை

ந‌ன்‌றி - பெருவெ‌ளி‌ப்பெ‌ண்
ச. ‌விசயல‌ட்சு‌மி
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனதை உருக்கும் ஒரு சந்திப்பு சென்னையில் : இரத்த ஸ்டெம் செல் கொடையாளர் அதனால் பலனடைந்த 11 வயது சிறுவனுடன் சந்திப்பு!

சின்ன வெங்காயம் உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் பலன்கள்..!

தினம் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் பலன்கள்..!

பீட்ரூட்டை உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்..!

அவித்த முட்டையில் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்..!

Show comments