Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு தலைக் காதல்

- ‌சி‌னிமா ‌விரு‌ம்‌பி

Webdunia
வியாழன், 21 மே 2009 (17:50 IST)
வாணி ஜெயராம் பாடிய ஒரு உருது கஜலை தம ி‌ ழி‌ல ் மொழிபெயர்ப்ப ு செ‌ய்‌த ு ‌ சி‌னிம ா ‌ விரு‌ம்‌ப ி எ‌ன் ற பெய‌ரி‌ல ் வாசக‌ர ் ஒருவ‌ர ் அனு‌ப்‌பிபு‌ள்ளா‌ர ்.

ஒரு தலைக் காதல் (அல்லது) கூடா நட்பு

பெரும் பிழை ஏதும் இல்லை உன்னிடமோ அன்ற ி
என்னிடமோ ஆயின்
வெறும் வாயை மெல்லுவோர் அவல் கிடைத்தால் விடுவாரோ?
சந்திப்பதிலோ பழகுவதிலோ அப்படி ஒன்றும் தவறு இல்லை;
மாக்கள் மனத்தை அல்ல முகத்தை அன்றோ படிக்கின்றார்!

என் மனதைப்பார், முகவெட்டை அல்ல!
முகச்சாயல் எல்லாம் காலச் சுவடுகளால் மாறி விடுமே!
உன்னைக் காதலிக்கிறேன் என்ற எந்தப் பேச்சையும் நம்பாதே!
வெட்டி வார்த்தையும் சில சமயம் வாய்வழி வரத்தானே செய்கிறது!
மாக்கள் மனத்தை அல்ல முகத்தை அன்றோ படிக்கின்றார்!

ஊமைக்காதல் ஒன்றினை இவ்வுலகோர்
அழகி (ஆண் மயக்கி ?) ஒருத்தியின் அழைப்பென்று நினைத்தார்;
நான் பேசும் பாணியை இணக்கம் என்று திரித்தார்;
என் மௌனத்தை சம்மத‌ம ் எ‌ன்ற ு கதை‌த்தா‌ர ்;
மாக்கள் மனத்தை அல்ல முகத்தை அன்றோ படிக்கின்றார்!

‌ நீ என்னருகேதான் ஆயினும் என்னவன் இல்லையே!
காலம் உன்னை என்னிடம் அடமானம் அன்றோ வைத்தது;
( எப்போது வேண்டுமானாலும் மீட்டுக்கொள்ள!)
உன் உள்ளத்தில் வேறு எவளோ உறைகிறாள் போலு‌ம ்!
விட்டுத் தள்ளு! காதல் எனதுதானே! உனக்கென்ன நட்டம ்!
மாக்கள் மனத்தை அல்ல முகத்தை அன்றோ படிக்கின்றார்!
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனதை உருக்கும் ஒரு சந்திப்பு சென்னையில் : இரத்த ஸ்டெம் செல் கொடையாளர் அதனால் பலனடைந்த 11 வயது சிறுவனுடன் சந்திப்பு!

சின்ன வெங்காயம் உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் பலன்கள்..!

தினம் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் பலன்கள்..!

பீட்ரூட்டை உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்..!

அவித்த முட்டையில் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்..!

Show comments