Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அடையாளம் காட்டிய மே தினம்!

கா.அ‌ய்யநாத‌ன்

அடையாளம் காட்டிய மே தினம்!
, வியாழன், 1 மே 2008 (13:35 IST)
வெட்ட வெளியில் சுட்டு எரிக்கும்
உச்சி வெயிலில் கட்டி சேரடிக்க
தன்னோடு உழைத்த காளைகள
தீவனம் தண்ணீர் காட்டாமல
உணவு கொள்வதில்லை உழவனவன

சமையற்கட்டை சுற்றி விட்டு
அரிசி நொய்போட்டு வளர்த்த கோழி
இட்ட முட்டைகள் பொறித்த குஞ்சுகள
வளர்த்து விற்று வயிற்றைக் கழுவினாலும
அடித்து உண்பதில்லை அவைகளை வளர்த்தவன்

தான் வாழ்ந்த விசால வனத்தை அண்டி
அழித்து நிலம் சமைத்து வாழ்ந்தாலும
பழிகொண்டு தாக்குவதில்லை விலங்குகள
ஒடுங்கி ஒளிந்து அவன் வாழ இடமளிக்
மனிதனும் வாழ்கிறான் அவைகளும் வாழ்கின்ற

ஆனால் தொன்று தொட்டு வந்த நம் மானு
வரலாற்றில் காணும் சில கூத்தையெல்லாம
விழிபிதுங்க யோசித்தாலும் புரியவில்லை
ஏன் உழைத்தவனைச் சுரண்டிய மனிதரெல்லாம
அவனை மதிக்காமல் பிழிந்து வதைத்தனரென்ற

உழைத்தவன் வியர்வை உலர்வதற்குள
அவன் ஊதியத்தை அளித்துவிடு என்றுரைத்
ஏசு பிரானின் வழி வந்தோரெல்லாம் கும்பிட்டுவிட்ட
அவர் சொல்லை ஏன் மறந்தாரென்பத
சிந்தித்துப் பார்த்தும் கிஞ்சித்தும் புரியவில்லை

தோண்டித் தோண்டி உழைத்துக் கொடுத்தாலும
வேண்டினால் கிடைக்காது உரிமையும் ஓய்வும
ஒன்று சேர்ந்து ஓர் குரலில் போராடினால்தான
உரிமையும் கிடைக்கும் விடுமுறையும் உண்டென்பத
ஓங்கி ஒலிக்கப் பிறந்ததே மே தினம

மாணவர் படிக்கும் வரலாறு எல்லாம்
சோற்றுக்கும் சுகத்திற்கும் நடந்த சண்டைகள்தான
மண்ணிற்கும் பெண்ணிற்கும் மாண்ட கதைகள்தான
மனிதனுக்கு மனிதனை அடையாளம் காட்டியத
உன்னத தியாகத்தில் மலர்ந்த மே தினம் அன்றோ.

மே தின வாழ்த்துகள்.

Share this Story:

Follow Webdunia tamil