30 வயது பெண்ணுடன் 17 வயது சிறுவன் உடலுறவு.. நேரில் பார்த்த 6 வயது சிறுமி பலி..!

Siva
ஞாயிறு, 7 செப்டம்பர் 2025 (11:53 IST)
உத்தரப் பிரதேசத்தின் சிகந்தரா ராவு காவல் நிலையப் பகுதியில், ஆறு வயது சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஒரு பெண்ணும், ஒரு  இளைஞரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
உர்வி என்ற ஆறு வயது சிறுமி, புதன்கிழமை காலை 10 மணியளவில், தனது வீட்டில் நடந்த ஒரு விழாவின்போது காணாமல் போனார். நண்பகலுக்கு பிறகு, சுமார் 1:30 மணியளவில், அவரது உடல் ஒரு சணல் பையில் அடைக்கப்பட்டு, கழுத்தில் துணி கட்டப்பட்ட நிலையில், ஒரு கிணற்றுக்குள் கண்டெடுக்கப்பட்டது. பிரேத பரிசோதனை அவர் கழுத்தை நெரித்து கொன்றது உறுதி செய்யப்பட்டது.
 
ஒரு பெண்ணையும், அவரது காதலரான 17 வயது இளைஞனையும் தவறான நிலையில் உர்வி பார்த்துவிட்டாள். இதை தனது தந்தையிடம் சொல்லி விடுவதாக மிரட்டியதால், இருவரும் சேர்ந்து அவளை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
 
காவல்துறையின் கூடுதல் கண்காணிப்பாளர் அசோக் குமார் சிங் கூறியதாவது: "சுமார் 30 வயது மதிக்கத்தக்க அந்த பெண், அந்த 17 வயது இளைஞருடன் மூன்று மாதங்களாக தொடர்பில் இருந்துள்ளார். சம்பவத்தன்று, கணவரும் மாமியாரும் வெளியே சென்றிருந்ததால், அந்த இளைஞனை வீட்டிற்கு அழைத்துள்ளார். அப்போது, சிறுமி உர்வி அவர்களை பார்த்துவிட்டாள். எச்சரித்தும் கேட்காமல், தந்தையிடம் கூறிவிடுவேன் என்று மிரட்டியதால், இருவரும் அவளை கொலை செய்து, உடலை ஒரு சாக்கில் அடைத்து, கிணற்றில் வீசியுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விரைவில் சண்முகம் மீது சட்ட நடவடிக்கை?.. டிஜிபிக்கு மகளிர் ஆணையம் பரிந்துரை!..

செங்கோட்டையன் சொன்னது உண்மையா?!.. நிர்மலா சீதாராமன் விளக்கம்!..

வெறும் பென்சிலை வைத்து சுவரில் ஓட்டை போட்ட நபர்.. சுவர் அவ்வளவு பலவீனமா?

குண்டு வெடிப்புக்கு பின் 3 முறை போன் செய்தேன்.. பதிலில்லை: 26 வயது மகனை இழந்த தந்தை உருக்கம்.!

குழந்தை பெற்று டிஸ்சார்ஜ் ஆன பெண் உயிரிழப்பு.. சிறப்பு விசாரணைக்கு அமைச்சர் உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்