Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிரம்ப் 25% வரி விதித்தாலும் இந்தியாவில் தயாரிக்கப்படும் ஐபோன் விலை குறைவு தான்.. எப்படி தெரியுமா?

Siva
வியாழன், 29 மே 2025 (09:11 IST)
இந்தியாவில் தயாரிக்கப்படும் ஐபோன்கள் மீது டிரம்ப் 25% வரி விதிக்க முடிவு செய்தாலும் கூட, அவற்றை இந்தியாவில் தயாரிப்பது அமெரிக்காவில் தயாரிப்பதை விட  சிக்கனமாக இருக்கும் என Global Trade Research Initiative  அறிக்கை கூறுகிறது.  
 
ஒவ்வொரு ஐபோனிலும் ஆப்பிள் அதன் பிராண்டு, மென்பொருள் மற்றும் வடிவமைப்பு காரணமாக அதிகபட்ச லாபத்தை   கொள்கிறது. Qualcomm மற்றும் Broadcom போன்ற அமெரிக்க நிறுவனங்கள் சுமார் $80 மதிப்புள்ள பாகங்களை வழங்குகின்றன. தைவான் சிப்கள் மூலம் பங்களிக்கிறது. தென்கொரியா ஸ்க்ரீன் மற்றும் மெமரி சிப்களுக்கு $90 அளவிலும், ஜப்பான் கேமரா பாகங்களுக்கு சுமார் $85 அளவிலும் வழங்குகிறது. மற்ற நாடுகளும் சிறிய அளவில் பங்காற்றுகின்றன.
 
 சீனா மற்றும் இந்தியா ஐபோன் அசெம்பிள்  செய்ய முக்கிய பங்கு வகிப்பினும், அவர்கள் ஒவ்வொரு போனுக்கும் சுமார் $30 மட்டுமே பெறுகிறார்கள், இது மொத்த விலையின் 3% கூட இல்ல.
 
இந்தியாவில் ஐபோன் தயாரிப்பது இன்னும் சிக்கனமாக இருப்பதற்கான முக்கிய காரணம்,  ஊழியர்களின் சம்பளம் மிகக் குறைவாக இருப்பது. இந்திய தொழிலாளர்கள், அமெரிக்க தொழிலாளர்களை போல் அதிக சம்பளம் பெறுவதில்லை. உதாரணமாக, கலிபோர்னியாவில் ஒரு தொழிலாளி மாதம் சுமார் $2,900 சம்பளமாக பெறுகிறார், இது இந்திய தொழிலாளியின் சம்பளத்தைவிட 13 மடங்கு அதிகம்.
 
இந்தியாவில் ஒரு ஐபோன் அசெம்பிள் செய்யும் செலவு சுமார் $30 ஆகும். ஆனால் அமெரிக்காவில் அசெம்பிள் செய்யும் பட்சத்தில் செலவு பல மடங்கு அதிகமாகும். அதேசமயம், ஆப்பிள் இந்தியாவில் உற்பத்திக்கு ஊக்கமளிக்கும் அரசு திட்டங்களால் கூடுதல் நன்மை பெறுகிறது.
 
ஆப்பிள் தனது உற்பத்தியை அமெரிக்காவுக்கு மீண்டும் மாற்றினால், ஒவ்வொரு ஐபோன் மூலம் பெறும் லாபம் $450-இல் இருந்து சுமார் $60 ஆகக் குறைந்துவிடும். GTRI அறிக்கையின் படி, அமெரிக்க வரிச் சவால்கள் இருந்தபோதிலும், உலகளாவிய உற்பத்தி செலவுக்கான வித்தியாசங்கள் இந்தியாவை ஐபோன் உற்பத்திக்கான வலுவான தேர்வாக மாற்றுகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திரும்ப பெறப்பட்ட டிஎஸ்பி வாகனம்.. நடந்தே அலுவலகம் வந்த வீடியோ வைரல்..!

நீட் தேர்வில் தோல்வி.. பொறியியல் படித்த மாணவி.. இன்று ரூ.72 லட்சத்தில் வேலை..!

தவெக கொடி விவகார வழக்கு: விஜய் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

பரோலில் வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கைதி மீது துப்பாக்கி சூடு.. அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சிகள்..!

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம்.. திடீரென தேர்தல் ஆணையரை சந்தித்த திமுக எம்பிக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments