Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

19 ஆண்டுகளுக்கு பின் தனித்து போட்டியிட ராகுல் காந்தி முடிவு.. யாருக்கு சாதகமாக அமையும்?

Advertiesment
மேற்குவங்க தேர்தல்
மேற்குவங்க சட்டமன்ற தேர்தலில் 19 ஆண்டுகளுக்கு பிறகு 294 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட காங்கிரஸ் கட்சி முடிவெடுத்துள்ளது. 
 
கடந்த 2021 தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெல்ல முடியாத நிலையில், இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க இடதுசாரிகளுடனான கூட்டணியை முறித்து கொண்டு இந்த அதிரடி முடிவை ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜூன கார்கே தலைமையிலான குழு எடுத்துள்ளது.
 
இந்த முடிவு மேற்குவங்க அரசியலில் நான்கு முனை போட்டியை உருவாக்கியுள்ளது. காங்கிரஸின் தனித்து போட்டியால் பாஜக எதிர்ப்பு வாக்குகள் சிதற வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இது மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸிற்கு பின்னடைவையும், பாஜகவிற்குச் சாதகமான சூழலையும் ஏற்படுத்தக்கூடும்.
 
 குறிப்பாக மால்டா, முர்ஷிதாபாத் போன்ற மாவட்டங்களில் சிறுபான்மையினர் வாக்குகள் காங்கிரஸிற்கு திரும்பினால் அது மம்தாவின் வெற்றி வாய்ப்பை பாதிக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கணித்துள்ளனர்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒன்றிய அரசு கொடுக்கிற இடத்திலும் நாம வாங்குற இடத்திலும் எவ்வளவு நாள்?.. சட்டசபையில் முக ஸ்டாலின் பேச்சு!...