மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள சஹ்தேவ் நகர் பகுதியில், மூன்று வயது சிறுவன் ஒருவன் கட்டிடத்தின் முதல் மாடியில் இருந்து தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்தான். கங்காபூர் சாலையில் நடந்த இந்த சம்பவம் சி.சி.டி.வி.யில் பதிவாகியுள்ளது.
ஸ்ரீராஜ் அமோல் ஷிண்டே என்ற 3 வயது சிறுவன், வீட்டில் விளையாடி கொண்டிருந்தபோது, தனது நண்பர்களை கூப்பிடுவதற்காகத் பால்கனியின் சுவரில் ஏறி வளைந்ததாக சி.சி.டி.வி. காட்சிகளில் பதிவாகியுள்ளது. எதிர்பாராதவிதமாக, அவன் பேலன்ஸ் தவறி கீழே விழுந்தான்.
இந்த விபத்தால் சிறுவனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக சிறுவனை மீட்டு நாசிக்கில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிறுவன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறான்.