Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரானில் மாயமான 3 இந்தியர்கள்.. ஒரு மாதத்திற்கு பின் உயிருடன் மீட்பு.. என்ன நடந்தது?

Mahendran
புதன், 4 ஜூன் 2025 (10:22 IST)
ஒரு மாதத்திற்கு முன்பு ஈரானில் மூன்று இந்தியர்கள் மாயமான நிலையில், அவர்கள் தற்போது உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் கடந்த மாதம் ஈரானுக்கு சென்ற நிலையில், அங்கு திடீரென மூவரும் காணாமல் போனார்கள். ஹுஷன்பிரீத் சிங், ஜஸ்பால் சிங், அம்ரித்பால் சிங் ஆகிய மூவரும் காணாமல் போனது குறித்து இந்திய தூதரகத்திற்கு தகவல் கிடைத்த நிலையில், ஈரான் நாட்டு காவல்துறை அதிகாரிகளுடன் இணைந்து இந்திய தூதரக அதிகாரிகளும் காணாமல் போனவர்களை தேடும் பணிகளில் ஈடுபட்டனர்.
 
மூன்று பேரும் கடத்தப்பட்டிருக்கலாம் என்றும், அவர்களை விடுவிக்க கடத்தல்காரர்கள் பணம் கேட்டதாகவும் கூறப்பட்டது. தற்போது, ஒரு மாதத்திற்குப் பின்னர் மூன்று இந்தியர்களும் எந்த விதமான ஆபத்தும் இன்றி உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
 
அவர்களிடம் விசாரணை நடந்து வருவதாகவும், ஒரு மாதமாக அவர்கள் எங்கு இருந்தார்கள் என்பது குறித்து தகவல் இன்னும் சில மணி நேரங்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
 
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்னிடம் அந்த கேள்வியை மட்டும் கேட்காதீர்கள்: செய்தியாளர்களிடம் சசிதரூர் கோரிக்கை..!

மதிமுகவுக்கு முடிவு காலமா? மல்லை சத்யாவுடன் கூண்டோடு வெளியேறும் நிர்வாகிகள்?

தாலிக்கு தங்கம்.. மணமகளுக்கு இலவச பட்டுச்சேலை.. ஈபிஎஸ் வாக்குறுதி..!

ஜீவனாம்சமாக வீடு, ரூ.12 கோடியும் BMW காரும் கேட்ட பெண்.. நீதிமன்றம் கொடுத்த பதிலடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments