ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையான மாணவன் தற்கொலை.. மசோதா நிறைவேறிய அடுத்த நாளே சோக சம்பவம்..!

Siva
வெள்ளி, 22 ஆகஸ்ட் 2025 (12:00 IST)
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையான 18 வயது மாணவன் நேற்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
சமீபத்தில், பணம் கட்டி விளையாடும் அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளையும் தடை செய்யும் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் 
லக்னோவில் 12ஆம் வகுப்பு மாணவன் நேற்று காலை தனது வீட்டின் தரைத்தளத்தில் உள்ள அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பத்தினரால் கண்டெடுக்கப்பட்டான்.
 
காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். அவனது தற்கொலை கடிதத்தில், படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை என்றும், பலமுறை முயற்சி செய்தும் ஆன்லைன் விளையாட்டுகளை நிறுத்த முடியவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தான்.
 
"நான் விளையாடுவது குறித்து நீங்கள் எல்லோரும் வருத்தப்படுகிறீர்கள்" என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த அந்தக் கடிதத்தில், ஆன்லைன் விளையாட்டுகளில் சூதாடுவது நிதி இழப்புகளை ஏற்படுத்தி, தன் குடும்பத்திற்கு சிக்கல்களை ஏற்படுத்தும் என்று பயப்படுவதாகவும் தெரிவித்துள்ளான்.
 
இருப்பினும், தனது மரணத்திற்கு யாரையும் அவன் குற்றம் சாட்டவில்லை. தனக்கு பிறகு பெற்றோர் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று உருக்கமாகக் கேட்டுக்கொண்டுள்ளான்.
 
இந்த சம்பவம், ஆன்லைன் விளையாட்டு அடிமைத்தனம் இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்தி வரும் தீவிரமான தாக்கத்தை மீண்டும் ஒருமுறை உணர்த்துகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இம்ரான் கானை அரசியல் கைதியாக ஏற்கிறதா இந்தியா? பாகிஸ்தான் ஊடகம் பரப்பிய தகவல்..!

திருப்பரங்குன்றம் மலை தீபம் சர்ச்சை: தர்கா அருகே தீபம் ஏற்றும் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு!

விஜயின் ரோட் ஷோவுக்கு புதுச்சேரி காவல்துறை அனுமதி மறுப்பு!...

20 நிமிடங்களில் முறிந்த திருமணம்: மணமகள் மறுத்ததால் ஊர் பஞ்சாயத்தில் விவாகரத்து!

பாஜக வேட்பாளராக போட்டியிடும் சோனியா காந்தி.. தமிழில் அடித்த போஸ்டரால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments