ராணுவம் பற்றி அவதூறாகப் பேசுவது பேச்சு சுதந்திரமா? ராகுல் காந்திக்கு நீதிமன்றம் கண்டனம்..!

Mahendran
வியாழன், 5 ஜூன் 2025 (11:32 IST)
பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம் என்பது அனைவருக்கும் உண்டு என்றாலும், ராணுவம் குறித்து அவதூறாக பேசுவதெல்லாம் பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரத்தில் வராது என்று ராகுல் காந்திக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
 
இந்திய ராணுவம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில், இந்த வழக்கின் விசாரணையின் போது நீதிபதி ராகுல் காந்திக்கு கண்டனம் தெரிவித்தார்.
 
தன் மீதான வழக்கிற்கு தடை விதிக்க வேண்டும் என்று ராகுல் காந்தியை மனு செய்த நிலையில், அந்த மனு விசாரணைக்கு வந்த போது, ராகுல் காந்தியை அவர் சரமாரியாக நீதிபதி கேள்வி எழுப்பினார்.
 
அரசியலமைப்பு சட்டத்தின்படி பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு என்றாலும், இந்த சுதந்திரம் நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது என்று நீதிபதி தெரிவித்தார்.
 
ராணுவம் குறித்து அவதூறாக பேசுவதெல்லாம் பேச்சு சுதந்திரம் இல்லை என்று கூறி நீதிபதி ராகுல் காந்திக்கு கண்டனம் தெரிவித்தார்.
 
ராகுல் காந்தியின் மனு அரசியல் உள்நோக்கம் கொண்டதாக உள்ளது என்றும் நீதிபதி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: 150 எம்பிக்கள் கையெழுத்திட்ட தீர்மானம்..

பெயின்டிலிருந்து ரசாயணம் தாக்கி இரு தொழிலாளர்கள் மயக்கம்.. போலீஸார் தீவிர விசாரணை

தேசிய கபடி வீராங்கனை தற்கொலை.. தலைமறைவான கணவரை தேடும் போலீசார்..!

வந்தே மாதரம் விவாதம்.. பிரியங்கா காந்திக்கு பதிலடி கொடுத்த அமித்ஷா..!

தமிழ்நாட்டை போலவே புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும்.. விஜய் ஆவேசம்,..

அடுத்த கட்டுரையில்
Show comments