ஒரு நாளில் இத்தனை விமானங்கள் ரத்தா? ஏர் இந்தியா சேவையால் அதிர்ச்சியில் பயணிகள்! - இன்றைய ரத்து நிலவரம்

Prasanth K
வெள்ளி, 20 ஜூன் 2025 (13:25 IST)

அகமதாபாத் விமான விபத்தை தொடர்ந்து விமான பாதுகாப்பு சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தினசரி ஏராளமான ஏர் இந்தியா விமான சேவைகள் ரத்தாகி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இன்று மோசமான வானிலை, தொழில்நுட்ப கோளாறு உள்ளிட்ட பல காரணங்களால் 7க்கும் மேற்பட்ட விமானங்களை ஏர் இந்தியா ரத்து செய்துள்ளது. அதில் சர்வதேச விமான சேவைகளும் அடக்கம்.

 

ஏர் இந்தியாவின் தற்போதைய தகவலின்படி, துபாய் - சென்னை, டெல்லி - மெல்போர்ன், மெல்போர்ன் - டெல்லி, துபாய் - ஹைதராபாத் சர்வதேச விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

உள்நாட்டு விமான சேவைகளில் புனே - டெல்லி, அகமதாபாத் - டெல்லி, ஹைதராபாத் - மும்பை மற்றும் சென்னை - மும்பை உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

 

தொடர்ந்து கடந்த சில நாட்களாகவே ஏராளமான ஏர் இந்தியா விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு வரும் நிலையில், இது பயணிகளுக்கு அவதியை ஏற்படுத்தி வருகிறது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments