Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜிஎஸ்டி சீர்திருத்தம் தொடரும்! வரிகள் இன்னும் குறையும்! - பிரதமர் மோடி அதிரடி!

Advertiesment
PM Modi

Prasanth K

, வியாழன், 25 செப்டம்பர் 2025 (13:44 IST)

இந்தியாவில் ஜிஎஸ்டி சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் மேலும் பல சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட உள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

 

உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடந்த சர்வதேச வர்த்தக கண்காட்சியை தொடங்கி வைத்த பிரதமர் மோடி பேசியபோது “உலகளவில் பல இடையூறுகள், நிச்சயமற்ற தன்மைகள் இருந்தாலும் இந்தியாவின் வளர்ச்சியில் எந்த தடையும் இல்லை. இந்தியா போன்ற ஒரு நாடு யாரையும் சார்ந்து இருப்பதை இனி ஏற்றுக் கொள்ள முடியாது.

 

சிப் முதல் கப்பல் வரை அனைத்தும் இந்தியாவில் தயாரிக்கப்பட வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். ஒவ்வொரு தயாரிப்பும் நமது நாட்டுல் சுயசார்புடையதாக இருக்க வேண்டும். இந்தியாவில் துடிப்பான பாதுகாப்புத்துறையை உருவாக்கியுள்ளோம். ரஷ்யாவுடன் இணைந்து உத்தர பிரதேசத்தில் ஏகே203 ரக துப்பாக்கிகளை தயாரிக்கும் ஆலை தொடங்க உள்ளோம். 

 

ஜிஎஸ்ரி வரி சீர்திருத்தங்கள் ஏழை, நடுத்தர வர்க்கத்தினருக்கான வரிகளை குறைத்துள்ளது. இந்தியா தொடர்ந்து வலுவடையும்போது மக்கள் மீதான வரிச்சுமையும் தொடர்ந்து குறையும். வரும் காலங்களிலும் ஜிஎஸ்டி சீர்திருத்தங்களின் செயல்முரை தொடரும்” என தெரிவித்துள்ளார்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உணவுக்காக காத்திருந்த அப்பாவிகள் மீது இஸ்ரேல் தாக்குதல்.. காசாவில் 80 பேர் பலி..!