Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இங்க அடிச்சா அங்க வலிக்கும்! கோகோ கோலா, பெப்சிக்கு தடை! - பல்கலைக்கழகம் அதிரடி!

Advertiesment
Pepsi Coke ban

Prasanth K

, வெள்ளி, 29 ஆகஸ்ட் 2025 (14:53 IST)

அமெரிக்கா இந்தியா மீது விதித்துள்ள அதிகமான வரியின் எதிரொலியாக அமெரிக்க பொருட்களை பயன்படுத்துவதை தவிர்ப்பது ட்ரெண்டாக தொடங்கியுள்ளது.

 

ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய்யை இந்தியா வாங்குவதை கண்டித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா மீது 50 சதவீதம் வரி விதித்துள்ளார். இதனால் இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதியாகும் பொருட்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. முக்கியமாக ஜவுளித்துறை பல ஆயிரம் கோடி நஷ்டமடையும் சூழல் ஏற்பட்டுள்ளது.

 

அமெரிக்காவின் இந்த செயல்பாடுகளை கண்டிக்கும் விதமாக அமெரிக்க நிறுவனங்களின் தயாரிப்புகளை புறக்கணிப்போம் என இந்தியாவில் பலர் ட்ரெண்ட் செய்யத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் பஞ்சாபில் செயல்பட்டு வரும் லவ்லி தனியார் பல்கலைக்கழகம் அமெரிக்காவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள உணவகங்கள் உள்ளிட்டவற்றில் அமெரிக்க நிறுவனங்களின் குளிர்பானங்களான கோகோ கோலா, பெப்சி போன்றவற்றை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.

 

இதுகுறித்து பேசிய பல்கலைக்கழகத்தின் நிறுவனரும், மாநிலங்களவை எம்.பியுமான அசோக் குமார் மிட்டல் “அமெரிக்காவின் நியாயமற்ற எந்த சூழ்ச்சிக்கும் இந்தியா அடி பணியாது” எனக் கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் பற்றிய கேள்விகளை என்னிடம் கேட்க வேண்டாம்.. பத்திரிகையாளர்கள் மீது பிரேமல்தா கோபம்..!