டெல்லியில் செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் வெடிப்பு தாக்குதலுக்கு காரணமானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும், அவர்கள் தப்பவே முடியாது என்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாட்டு மக்களுக்கு உறுதியளித்துள்ளார்.
இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த 12 பேரின் குடும்பங்களுக்கு அவர் இரங்கல் தெரிவித்தார். மேலும், "இந்தக் கார் வெடிப்புக்கு காரணமானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்பதை தேசத்துக்கு நான் உறுதியளிக்க விரும்புகிறேன்," என்று அவர் சூளுரைத்தார்.
நாட்டின் முன்னணிப் புலனாய்வு அமைப்புகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன.
முதற்கட்டத் தகவல்களின்படி, டாக்டர் முகமது உமர் என்ற மருத்துவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து சதியில் ஈடுபட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விசாரணை குறித்த தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.