மாநிலங்களவையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசியபோது, "யாசகம் எடுக்கக்கூட தமிழ் உதவாது" என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாக குறிப்பிட்டு விமர்சித்தார். மேலும், வாக்காளர் பட்டியலில் உள்ள பிழைகளால் மக்களின் உரிமை பறிபோவதாகவும், பீகார் 'வாழும் பிணங்களின்' பூமியாக மாறிவிட்டதாகவும் அவர் காட்டமாகப் பேசினார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக நிர்மலா சீதாராமன் அலுவலகம் 'எக்ஸ்' தளத்தில் வீடியோ ஆதாரத்துடன் விளக்கம் அளித்துள்ளது. அதில், கடந்தாண்டு மார்ச் மாதம் நிதியமைச்சர் பேசியது அவரது சொந்தக் கருத்தல்ல;
மாறாக ஈ.வெ.ரா பெரியார் கூறிய கருத்தையே அவர் மேற்கோள் காட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கமல்ஹாசன் குறிப்பிட்டது தவறான தகவல் என்றும் அதில் விளக்கப்பட்டுள்ளது.
எந்த அரசாங்கமும் நிரந்தரமில்லை என கமல் எச்சரித்த நிலையில், நிதியமைச்சர் தரப்பின் இந்த மறுப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.