Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நிதியமைச்சர் பதவிக்கு வேறு ஆள்! நிர்மலா சீதாராமனை நீக்குகிறதா மத்திய அரசு!

நிதியமைச்சர் பதவிக்கு வேறு ஆள்! நிர்மலா சீதாராமனை நீக்குகிறதா மத்திய அரசு!
, திங்கள், 1 ஜூன் 2020 (07:32 IST)
நிதியமைச்சராக இருக்கும் நிர்மலா சீதாராமனின் செயல்பாடுகள் திருப்தி அளிக்காததால் அவருக்கு பதில் கே வி காமத் புதிய நிதியமைச்சராக நியமிக்கப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மோடி இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்ததற்கு பிறகு அமைக்கப்பட்ட அமைச்சரவையில் நிர்மலா சீதாராமன் நிதியமைச்சராக பொறுப்பேற்றார். ஆனால் ஆரம்பம் முதலே அவரது செயல்பாடுகள் எதுவும் மக்களுக்கு திருப்தியளிக்கவில்லை. மேலும் கட்சிக்குள்ளேயே இருக்கும் சுப்ரமண்ய சுவாமி போன்றவர்கள் நிதியமைச்சருக்கு பொருளாதாரம் என்றால் என்னவென்றே தெரியாது எனக் கூறி விமர்சனம் செய்தார்.

இந்நிலையில் இப்போது நிதியமைச்சர் பதவியில் இருந்து அவர் நீக்கப்படலாம் என செய்திகள் பேசப்பட்டு வருகின்றன. மேலும் அந்த பதவியில் கே.வி.காமத் நியமிக்கப்பட இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன. இது சம்மந்தமாக கார்த்திக் சிதம்பரம் ‘“A little birdie tells me that “cometh” the hour in North Block’ எனக் குறிப்பிட்டது மேலும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

கே வி காமத் ஒரு மூத்த வங்கியாளர். பல்வேறு வங்கிகளின் தலைமை நிர்வாகியாக செயல்பட்டவர். காமத் பிரிக்ஸ் அமைப்பின் புதிய மேம்பாட்டு வங்கியின் தலைவராக இருந்த அவர் கடந்த வாரம்தான் அந்த பதவியில் இருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரு மாதத்தில் ஓய்வு பெறவிருந்த டாக்டர் கொரோனாவால் மரணம்: அதிர்ச்சி தகவல்