கால்பந்து கேலரி உடைந்து 200 பேர் காயம்: கேரளாவில் விபரீதம்!

Webdunia
ஞாயிறு, 20 மார்ச் 2022 (14:00 IST)
கால்பந்து கேலரி உடைந்து 200 பேர் காயம்: கேரளாவில் விபரீதம்!
கேரளாவில் கால்பந்து போட்டி ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அந்த போட்டியை காண்பதற்காக ஏராளமான ரசிகர்கள் கேலரியில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென கேல்ரி சரிந்து விழுந்ததால் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
கேரள மாநிலத்திலுள்ள மலப்பாடு என்ற பகுதியில் உள்ள கால்பந்து மைதானத்தில் கால்பந்து போட்டி நடைபெற்று வந்தது. இந்த போட்டியை ஆயிரக்கணக்கான ரசிகர்கள் நேரில் கண்டு ரசித்தனர். அப்போது திடீரென ஒரு பக்கத்தில் இருந்த கேலரி சரிந்து விழுந்தது
 
இதனை அடுத்து இடிபாடுகளில் சிக்கி 200 பேர் வரை காயமடைந்ததாகவும் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது
 
மூங்கில் உள்ளிட்ட மரக்கட்டைகளை பயன்படுத்தி தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த இந்த கேலரியில் அளவுக்கு அதிகமான நபர்கள் உட்கார்ந்து இருந்ததே இந்த விபத்திற்கு காரணம் என்றும், இந்த விபத்தில் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு கை, கால் உடைந்ததாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதிய விமான சேவை தொடங்க இதுவே 'சிறந்த நேரம்.. இண்டிகோ பிரச்சனை குறித்து மத்திய அமைச்சர்..!

உங்கள் மனைவி குழந்தைகளை இந்தியாவுக்கு அனுப்புங்கள்: அமெரிக்க துணை அதிபருக்கு நெட்டிசன்கள் பதிலடி..!

வங்கக்கடலில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு நிலை: டெல்டா மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

அதிமுக - பாஜக கூட்டணி 3-வது இடத்துக்குத் தள்ளப்படும்: டிடிவி தினகரன் கணிப்பு!

Tvk Meeting: தமிழ்நாட்ல இருந்த யாரும் வராதீங்க!.. என்.ஆனந்த் கோரிக்கை!..

அடுத்த கட்டுரையில்
Show comments