மத்திய அமைச்சர் மகளுக்கு பாலியல் சீண்டல்.. ஏழு பேர் மீது வழக்குப்பதிவு..!

Mahendran
திங்கள், 3 மார்ச் 2025 (11:16 IST)
மகாராஷ்டிரா மாநிலத்தில், மத்திய அமைச்சர் ரக்‌ஷா கட்ஸே அவர்களின் மகள் மற்றும் அவரது நண்பர்கள் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்போது, அவர்களை பின்தொடர்ந்து சென்ற சிலர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
மேலும், அமைச்சர் மகள் உள்ளிட்ட இளம் பெண்களின் புகைப்படங்களை அவர்களின் அனுமதி இல்லாமல் எடுத்ததாகவும் கூறப்படுகிறது. அமைச்சரின் மகளுடன் பாதுகாப்பாக சென்ற மெய்க்காப்பாளர்கள் இதை தடுத்தபோது, அந்த நபர்கள் தகாத முறையில் நடந்துகொண்டதாக தகவல் வந்துள்ளது.
 
இதனை அடுத்து, புகாரின் அடிப்படையில் ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர்களில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மற்றவர்கள் தலைமறைவாக உள்ள நிலையில், அவர்களை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
 
இது குறித்து மத்திய அமைச்சர் ரக்‌ஷா கட்ஸே செய்தியாளர்களிடம் பேசுகையில், "என் மகள், ஒரு கும்பல் தவறாக நடந்துகொண்டதாக கூறினார். இது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. ஒரு மத்திய அமைச்சரின் மகளுக்கே இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால், சாதாரண மக்களின் நிலையை நினைத்துப் பாருங்கள். இதுகுறித்து முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் உடன் பேசியுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100% சொத்து வரி உயர்வு.. ஆர்ப்பாட்டம் தேதியை அறிவித்த அதிமுக..!

நீதிபதி சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: 150 எம்பிக்கள் கையெழுத்திட்ட தீர்மானம்..

பெயின்டிலிருந்து ரசாயணம் தாக்கி இரு தொழிலாளர்கள் மயக்கம்.. போலீஸார் தீவிர விசாரணை

தேசிய கபடி வீராங்கனை தற்கொலை.. தலைமறைவான கணவரை தேடும் போலீசார்..!

வந்தே மாதரம் விவாதம்.. பிரியங்கா காந்திக்கு பதிலடி கொடுத்த அமித்ஷா..!

அடுத்த கட்டுரையில்