ஆணவ படுகொலை செய்யப்பட்ட காதலர்.. இறந்த உடலை திருமணம் செய்து ரத்தத்தால் திலகமிட்ட காதலி..!

Siva
திங்கள், 1 டிசம்பர் 2025 (18:13 IST)
தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த தனது காதலர் சக்‌ஷம் டாட்டே தனது குடும்பத்தினரால் சுட்டு கொல்லப்பட்டதை தொடர்ந்து, அவரது காதலி ஆச்சல் மாமில்வார் சக்‌ஷமின் இரத்தத்தை தன் நெற்றியில் குங்குமமாக பூசி, நீதி கோரிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
சம்பவம் நடந்த அன்று, ஆச்சலின் தந்தை கஜானன் மாமில்வார், அவரது சகோதரர்கள் சாகில் மற்றும் ஹிமேஷ் மற்றும் சில கூட்டாளிகள், சக்‌ஷம் அந்த பகுதியில் இருப்பதை அறிந்து அவரை தாக்கினர். மேலும் சக்‌ஷமை சுட்டதுடன், பின்னர் ஒரு பெரிய கல்லை கொண்டு தாக்கியுள்ளனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 
 
21 வயதான ஆச்சல், சக்‌ஷமின் சடலத்தை வைத்து திருமணம் செய்துகொண்டதுடன், அவர் குடும்பத்தாருடனே நிரந்தரமாக தங்கப்போவதாக உறுதியளித்தார். 
 
சக்‌ஷம் தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவர் என்பதால், தங்கள் திருமணத்தை ஆச்சலின் குடும்பம் எதிர்த்ததாக அவர் கூறினார். கொலை மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த நாந்தேட் காவல்துறை, ஆச்சலின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட எட்டு பேரைக் கைது செய்தது. 
 
சக்‌ஷமை கொன்றவர்களுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என்று ஆச்சல் வலியுறுத்தியுள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பினராயி விஜயன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: காவல்துறை தீவிர சோதனை..!

ஆணவ படுகொலை செய்யப்பட்ட காதலர்.. இறந்த உடலை திருமணம் செய்து ரத்தத்தால் திலகமிட்ட காதலி..!

சென்னை ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு: புழல் ஏரியில் உபரிநீர் திறப்பு!

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! எந்தெந்த மாவட்டங்களில்?

நடிகை கனகாவின் தந்தை இயக்குனர் தேவதாஸ் காலமானார்

அடுத்த கட்டுரையில்
Show comments