கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ். ரூ.468 பத்திரங்கள் விவகாரமா?

Siva
திங்கள், 1 டிசம்பர் 2025 (12:38 IST)
கேரள மாநிலத்தில் 2019ஆம் ஆண்டு வெளியிட்ட மசாலா பத்திரங்கள் தொடர்பாக அன்னிய செலாவணி விதிமீறல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது குறித்து, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், அவரது தனி செயலாளர் மற்றும் முன்னாள் நிதியமைச்சர் தாமஸ் ஐசக் ஆகியோருக்கு அமலாக்கத்துறை அன்னிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சுமார் ரூ. 468 கோடி மதிப்பிலான பரிவர்த்தனைகள் இந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளன.
 
இந்தியாவிலேயே முதன்முதலில் இத்தகைய ரூபாயில் வெளியிடப்பட்ட பத்திரங்களை வெளியிட்ட மாநிலம் கேரளா ஆகும். கேரள உட்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியம் 2019-இல் லண்டன் பங்குச்சந்தையில் மசாலா பத்திரங்களை வெளியிட்டு ரூ. 2,150 கோடி திரட்டியது.
 
இந்த நிதியை சட்டவிரோதமாக திசை திருப்பியதாகவும், அந்நிய செலாவணி விதிமுறைகளை மீறியதாகவும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை முன்னதாகவே தாமஸ் ஐசக்குக்கு சம்மன் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ். ரூ.468 பத்திரங்கள் விவகாரமா?

மக்கள் பிரச்சனையை நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு பெயர் நாடகமா? பிரியங்கா காந்தி

புதன் வரை நீடிக்கும் புயல் சின்னம்! சென்னையில் 100 மிமீஐ தாண்டும்: தமிழ்நாடு வெதர்மேன்

தொடர் மழை எதிரொலி.. சென்னையில் இன்று மதியத்திற்கு மேல் பள்ளி விடுமுறையா?

வழக்கம் போல் ஆரம்பித்த சில நிமிடங்களில் முடங்கிய மக்களவை.. எஸ்.ஐ.ஆருக்கு எதிர்ப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments