காதலியை, கண்டக்டருடன் சேர்ந்து கற்பழித்து கொன்ற டிரைவர்
காதலியை, கண்டக்டருடன் சேர்ந்து கற்பழித்து கொன்ற டிரைவர்
ஒடிசா மாநிலத்தில் ஓடும் பஸ்சில் கண்டக்டருடன் சேர்ந்து காதலியை கற்பழித்து கொன்ற டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
ஒடிசா மாநிலத்தில் உள்ள கட்டாக் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும், சந்தோஷ் சாகு என்ற பஸ் டிரைவருக்கும் கடந்த 2 ஆண்டுகளாக காதல் இருந்து வந்தது. தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு இளம்பெண் வற்புறுத்தி வந்தார்.
இதையடுத்து கடந்த 1-ந் தேதி காதலியை திருமணம் செய்து கொள்வதாக கூறி பஸ்சில் அழைத்துச் சென்றார். அப்போது ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து டிரைவர் சந்தோஷ் சாகுவும் தனது நண்பரும் கண்டக்டருமான பிபுதி ரவத்துடன் சேர்ந்து காதலியை கொடூரமாக கற்பழித்தார்.
இருவரும் இரும்பு கம்பியால் அந்த பெண்ணை தாக்கியதில் அவர் மயக்கம் அடைந்தார். பின்னர் கற்பழித்தனர். கற்பழித்த சிறிது நேரத்தில் அந்த பெண் இறந்தார். அதன் பிறகு உடலை மகாநதியில் தூக்கி வீசி விட்டனர்.
இதனிடையே பெண்ணை காணாமல் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் தேடிய போது ஆற்றில் பிணம் மீட்கப்பட்டது. அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்ததை தொடர்ந்து டிரைவர்-கண்டக்டர் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.