டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு குறித்து பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கெரா, மத்திய அரசு பாதுகாப்பு விவகாரங்களில் தோல்வி அடைந்துவிட்டதாக சாடினார்.
"பிரதமர் பூடானுக்கு சென்றுவிட்ட நிலையில், நாட்டில் பதட்டமான சூழல் நிலவுகிறது. தேசிய தலைநகரில் நடந்த இந்த குண்டுவெடிப்பு பல கேள்விகளை எழுப்புகிறது," என்று அவர் குறிப்பிட்டார்.
டெல்லியில் அதிக வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்டிருப்பது மத்திய அரசின் முழுமையான தோல்வியை காட்டுவதாக கெரா விமர்சித்தார்.
"புல்வாமா தாக்குதலில் 350 கிலோ RDX எப்படி வந்தது என்பதற்கு ஆறு ஆண்டுகளுக்கும் மேலாகியும் இன்னும் பதில்கள் கிடைக்கவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது," என்று கேள்வி எழுப்பினார்.
சமீபத்தில் டெல்லி விமான நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பத் தாக்குதல் குறித்து அரசு பதிலளிக்கவில்லை என்றும், "பதில்கள் கிடைக்காதபோது மக்களிடையே பயம் ஏற்படுவது இயற்கையானது," என்றும் பவன் கெரா தனது உரையில் வலியுறுத்தினார்.