Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பொங்கல் பரிசு கொடுக்க பணம் இல்ல!.. கோப்புகள் ரிட்டன்.. சிக்கலில் புதுச்சேரி முதல்வர்!..

Advertiesment
rangasamy

Mahendran

, சனி, 10 ஜனவரி 2026 (10:37 IST)
பொங்கல் நெருங்கி வரும் நிலையில் தமிழக மற்றும் புதுச்சேரி அரசுகள் மக்களுக்கு பொங்கல் பரிசு கொடுக்கப்படும் என அறிவித்தார்கள். முன்பெல்லாம் அரிசி, சர்க்கரை, ஏலக்காய் போன்ற சில பொருட்கள் மற்றும் வேஷ்டி, சட்டை அதோடு பணமும் கொடுத்தார்கள். இந்த தேர்தலை பொருத்தவரை தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, வேஷ்டி, சேலை மற்றும் 3 ஆயிரம் ரூபாய் பணம், ஒரு கரும்பு ஆகியவை கொடுப்பதாக அறிவிக்கப்பட்டது. தற்போது தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

அதேபோல் புதுச்சேரியில் பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி ஏற்கனவே அறிவித்திருந்தார். ஆனால் இப்போது வரை அது கொடுக்கப்படவில்லை. ஏனெனில் 3.50 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு 4000 வழங்க 140 கோடி தேவைப்படுகிறது.

புதுச்சேரி அரசு தற்போது மத்திய அரசின் கீழ் செயல்படுவதால் அதற்கான கோப்பை ரங்கசாமி மத்திய அரசுக்கு அனுப்பினார். ஆனால் போதிய நிதி இல்லை எனக்கூறி நிதித்துறை அதிகாரிகள் அவற்றை திருப்பி அனுப்பிவிட்டனர். முதலில் ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரருக்கும் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக முடிவு செய்யப்பட்டது. ஆனால், அதற்கு 170 கோடி தேவைப்பட்டது.

எனவே, 1000 குறைத்து 4 ஆயிரம் கொடுக்கலாம் என முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக முதல்வர் ரங்கசாமி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமனிடம் தொலைபேசியில் பேசியதாக தெரிகிறது. அதற்கு பின் அவர் அனுப்பிய கோப்பையை மத்திய அரசு திருப்பி அனுப்பியிருப்பது புதுச்சேரி அரசுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

அந்த 4000 ரூபாய் பணம் மட்டுமல்லாமல் 750 ரூபாய் மதிப்புள்ள பொங்கல் பரிசையும் கொடுக்க புதுச்சேரி அரசு திட்டமிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!.. வானிலை மையம் எச்சரிக்கை!...